சர்வைவா - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

“இஸ் துனியா மேன்... அகர் ஜன்னத் ஹை, தோ பஸ் யஹி ஹை... யஹி ஹை...’’ இப்படி இந்தியில் எழுதப்பட்ட கவிதை ஒன்று உண்டு. அனானிமஸ் கவிஞர் எழுதிய பண்டைய ஃபார்வர்ட் இது.  ``இந்த உலகத்தில் சொர்க்கம் என்று ஒன்று இருந்தால், அது இங்குதான் இருக்கிறது... இங்குதான்!’’

இது உண்மையா பொய்யா என்பது அவரவர் வாங்குகிற சம்பளங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் `மூர்-இன் சொர்க்கம்’ இருப்பது இங்குதான்! நாம் வாழ்வதே மூர்-இன் சொர்க்கத்தில்தான்!
மூர்-இன் விதி (Moore’s law) உருவாக்கப்பட்டு இது  ஐம்பதாவது  ஆண்டு.  இந்த ஐம்பதாண்டுகளில் இந்த மூரானந்தா நம் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறார். நாம் உண்ணுகிற உணவில் தொடங்கி விண்ணைத் தொட்ட காதல்வரை எல்லாமே மூரால் மாறியிருக்கின்றன. மூர் என்றால் ‘நாட் நாட் செவன் ரோஜர் மூர்’ அன்று... கவர்ச்சி நடிகை டெமி மூரும் அன்று... இவர் வேற மூர்... கோர்டன் மூர். இன்டல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர். அமெரிக்கர்.

`The number of transistors per unit of area on a semiconductor doubles every eighteen months’  என்று மூர் எழுதிவைத்த இந்த இரண்டு வரிக் குறள்தான் இன்றுவரை தொழில்நுட்பத் தொண்டர்கள் அத்தனை பேருக்குமான திருவந்தாதி!

அவர் சொன்னபடியே ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை இல்லையென்றாலும் கிட்டத்தட்ட செமிகண்டக்டரில் இருக்கிற டிரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிக் கொண்டேதான் வந்திருக்கிறது.

இப்படி அதிகரித்ததால்தான் மைக்ரோப்ராசசர்கள் என்கிற `எந்திர மூளைகளின்’ அளவும் குறைந்து, குறைந்து...  முன்பொரு காலத்தில் டபுள் பெட்ரூம் சைஸில் இருந்த கணினிகளின் சைஸ் எல்லாம் இன்று நேனோவில் வந்து நிற்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!