சோறு முக்கியம் பாஸ்! - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மெனு கார்டுவெ.நீலகண்டன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

துரையின் புதிய அடையாளங்களில் ஒன்று `ஆப்பம் ஹாப்பர்ஸ்.’ தேங்காயால் ஆசீர்வதிக்கப்பட்ட அசல் இலங்கை உணவுகளை மதுரை கே.கே.நகர், எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் இருக்கிற `ஆப்பம் ஹாப்பர்ஸ்’ உணவகத்தில் ருசிக்கலாம்.

இலங்கையின் பாரம்பர்ய உணவான ஆப்பங்கள், அதற்கு சைட்-  டிஷ்ஷாக பொல் சம்பல், சீனிச் சம்பல், நூல் நூலாகப் பிரிகிற பூப்போன்ற இடியாப்பம்... அதற்கு சைட்- டிஷ், மணக்க மணக்கத் தேங்காய் சொதி: முட்டை ஸ்டஃப் செய்யப்பட்ட  அசல் சிலோன் ரொட்டி,  திகட்டாத  வாழைப்பழ இனிப்பு ரொட்டி, முழு விளை மீன் ஃப்ரை, மொத்தி மொத்தியான  இறால் வறுவல், வித்தியசமான நண்டு ஆம்லேட் என ருசி விரும்புபவர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தைத் தருகிறது இந்த உணவகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!