பணம் பழகலாம்! - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன்

‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்கிற ட்ரெண்ட், துணியில் ஆரம்பித்து இப்போது வீடுகள் வரை வந்துவிட்டது. கடந்த சில வருடங்கள் டல்லாக இருந்த ரியல் எஸ்டேட் துறை 2018-ல் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையாகாமல் தேங்கியிருந்த பல வீடுகள், அப்பார்ட்மென்ட்டுகள் இந்த ஆண்டு குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதனால் 2018-ஐ வீடு வாங்க சிறந்த ஆண்டாகச் சொல்கிறார்கள்.

வீடு வாங்க வேண்டும். ஆனால் எப்போது வாங்க வேண்டும், எவ்வாறு வாங்கவேண்டும், சொந்தமாகக் கட்டலாமா அல்லது, கட்டிய வீட்டை, ஃப்ளாட்டை வாங்கலாமா, மல்ட்டி ஸ்டோரி அப்பார்ட்மென்ட்டா, சிறிய அப்பார்ட்மென்ட்டா என சில குழப்பங்கள் எல்லோருக்குமே இருக்கின்றன.

செலவழிக்கும் இன்றைய தலைமுறையைப் பார்க்கும்போது, சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே வீட்டில் முதலீடு செய்வதுதான் நல்லது என்று சொல்வேன். சம்பாதிக்கும் பணத்தை நெறிப்படுத்த இதைவிடச்  சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இன்று நாம் வீட்டில் செய்யும் முதலீடு, பத்து அல்லது இருபது வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது மிகச்சிறந்த முடிவாகத் தெரியும்.

இடம் வாங்கி வீடுகட்டுவதுதான் சிறந்த வழி என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் இது பெரும்பான்மையானோருக்கு எட்டாக்கனியே. ஆகவே, பணத்தோடு இருக்கும்பட்சத்தில் தனி வீடு கட்டிக்கொள்ளுங்கள். பட்ஜெட் இல்லாதபட்சத்தில் அப்பார்ட்மென்ட் வாங்கிக்கொள்ளுங்கள். ஸ்கூல், ஜிம், பார்க், ஸ்விம்மிங் பூல் என சகல வசதிகளும் வசிக்கும் வளாகத்துக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பவர்கள் மல்ட்டி ஸ்டோரி அப்பார்ட்மென்ட்டுகளில் வீடு வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!