தேர்ந்தெடுப்பதில் தெளிவு தேவை!

விகடன் மற்றும் வி.எஸ்.பி பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய ‘+2 -க்கு பிறகு என்ன படிக்கலாம்?' நிகழ்ச்சி, ஏப்ரல் 15-ம் தேதி, திருப்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பிளஸ் டூ பொதுத்தேர்வை எழுதியுள்ளவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்று, சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துரையாடினர். வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியின் சேர்மன், வி.எஸ். பாலுசாமி அனைவரையும் வரவேற்றார்.

முதலில் பேசிய ‘மாஸ்டர் மைண்ட் அகாடெமி' நிறுவனர் சிவக்குமார் பழனியப்பன், “நீங்கள் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தாலும், துறை சார்ந்து எவ்வாறு கற்றுக்கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்களுடைய எதிர்காலமும் வேலைவாய்ப்பும் அடங்கியிருக்கிறது'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick