நாங்கள் ஒரு தொடர்கதை! | Legendary Tamil Serial writers meeting - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

நாங்கள் ஒரு தொடர்கதை!

தமிழ்மகன், தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி

தொடர்கதைகளுக்கு ஒரு பொற்காலம் இருந்தது. இதழ்கள் வந்து இறங்கும் ரயில்நிலையத்தில் அதிகாலையிலேயே காத்திருந்து பத்திரிகையை வாங்கி சுடச்சுட காபியுடன் படித்த காலம் அது. திரை நட்சத்திரங்களைப்போல, தொடர்கதை எழுத்தாளர்களைச் சந்தித்து ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் எனப் பரபரத்த ரசிகர் கூட்டம் இருந்தது. கொடிகட்டிப் பறந்த அந்த எழுத்தாளர்களைச் சந்திக்கவைத்தோம். எழுத்தாளர்கள் சிவசங்கரி, பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய `பேனா’ நண்பர்கள் இந்தச் சந்திப்புக்கு இசைந்தனர்.