பயங்கரம் பாலய்யா! | Balakrishna as best MLA in AP - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

பயங்கரம் பாலய்யா!

ஆர்.சரண், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

பாலகிருஷ்ணா... முழுப்பெயர் நந்தமூரி பாலகிருஷ்ணா. செல்லமாக பாலய்யா! ஆந்திராவே அலறும் ஆக்‌ஷன் அதகளத்துக்குச் சொந்தக்காரர். எல்லை தாண்டிய ஹீரோயிசத்தில் பாகிஸ்தான் வரை பாய்ந்து சென்று தீவிரவாதிகளை வேட்டையாடிய சிவப்பு விஜயகாந்த். 2014-ம் ஆண்டிலிருந்து ஆந்திரப்பிரதேசம் இந்துபூர் தொகுதி தெலுங்கு தேசக் கட்சி எம்.எல்.ஏ., ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பாச மருமகன் மற்றும் சம்பந்தி. ஆம், பாலய்யாவின் சகோதரி நர புவனேஸ்வரியைத்தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்திருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்குத்தான் தன் மகள் நர பிராமிணியை திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். சும்மாவே சலங்கை கட்டி ஆடுவார். இது போதாதா..? எப்படியெல்லாம்  எம்.எல்.ஏ-வாக அலறவிடுகிறார் என்பதைச் சொன்னால் ‘அம்புலி மாமா’ கதைபோலவே இருக்கும்.
 
* ஒருமுறை பாலகிருஷ்ணாவைச் சந்திக்க அவரது எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வயதான ஒரு மூதாட்டி வந்தார். அந்த நேரம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணா, ஹைதராபாத் ஷூட்டிங்கில் பிஸி. பாலைய்யாவின் பி.ஏ., ஏதோ ஒரு போன் காலில் பிஸி. மூதாட்டி எதையோ சொல்ல முற்பட்டிருக்கிறார். பாலைய்யாவின் உதவியாளரோ, மூதாட்டி தன்னிடம் பிச்சைக் கேட்பதாக நினைத்துக்கொண்டு, ‘போ... இதே வேலையாப்போச்சு உங்களை மாதிரி ஆளுங்களுக்கு!’ என விரட்டிவிட்டு,  போன் பேச்சைத் தொடர்ந்திருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க