சச்சார் - நீதியின் அடையாளம்!

ஆ.பழனியப்பன்

னித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நின்று உறுதியுடன் போரடிய  மனித உரிமைப் போராளி, தன் இறுதிமூச்சுவரை முற்போக்கா ளராக விளங்கியவர் என்ற பெருமைகளுக்கு உரியவர் நீதிபதி ராஜிந்தர் சச்சார்.

ஒன்றுபட்ட பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்த பீம் சென் சச்சாரின் மகனாக லாகூரில் பிறந்தவர் ராஜிந்தர் சச்சார். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது,  ரத்தம்தோய்ந்த துயரங்களை நேரில் கண்டவர். பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த சச்சார், 1952ல் சிம்லாவில் வழக்கறிஞராகப் பதிவுசெய்துகொண்டார். 1960-ல் உச்சநீதிமன்ற வழக்கறிஞர், 1970-ல் டெல்லி உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி, 1972-ல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி என உயர்ந்தார். சிக்கிம் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக சச்சார் இருந்தபோது, இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட  எமர்ஜென்சியைக் கடுமையாக எதிர்த்ததால் ராஜஸ்தானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1977-ல் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட சச்சார், 1984 முதல் 1986-ல் ஓய்வுபெறும் வரை டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்