உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி... | Facebook data breach explained - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

உங்களுக்குத் தெரியாமல்... உங்களைப் பற்றி...

கார்க்கிபவா, ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சென்ற வாரம் ஃபேஸ்புக்குக்குத் தலைவலி. ‘கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா’ என்ற நிறுவனம் ஃபேஸ்புக் மூலம் சேகரித்த வாடிக்கையாளர்கள் பற்றிய டேட்டாவைத் தவறாகப்  பயன்படுத்தியது. அது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அமெரிக்க செனட் சபை முன் ஆஜராக வேண்டியிருந்தது. 500க்கும் மேற்பட்ட கேள்விகளால்  5 மணி நேரத்துக்கு மார்க்கின் கோட்டைப் பிடித்து உலுக்கி விட்டார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு ஃபேஸ்புக் தனது பிளாக்கில் பதில் சொல்லி வருகிறது. அதில் சொல்லப்பட்ட முக்கியமான ஒரு விஷயம்தான் “ஆமாம்... எங்கள் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கில் இல்லாவிட்டாலும் அவர்களை நாங்கள் கண்காணிப்பது உண்மை” என்பது. 

நாம் ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்யாதபோது எப்படி நம்மைக்  கண்காணிக்க முடியும்? அதற்கான நான்கு வழிகளை விவரித்திருக்கிறது ஃபேஸ்புக்.

1) சில இணையதளங்களுக்குச்  சென்றால் “எங்களை லைக் செய்யுங்கள்” என ஒரு பேனர் வருமே, அந்த பேனர் போதும்!  ஃபேஸ்புக் உங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று பொருள்.

2) சில இணையதளங்களுக்கு லாக் இன் ஐடியாகவே நாம் ஃபேஸ்புக்  ஐடியைப் பயன்படுத்துகிறோம். அப்படி இருந்தாலும் ஃபேஸ்புக் ரேடாரில் நாம் வந்துவிடுவோம்.

3) ‘ஃபேஸ்புக் அனலிட்டிக்ஸ்’ என்ற டூல் மூலம் தகவல்கள் சேகரிக்கப்படும்.

4) ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலமும் டேட்டா  கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க