செவி கொடுப்போம்!

அ.சையது அபுதாஹிர்

பிறவியிலேயே செவித்திறனும் பேசும் திறனுமின்றி  குழந்தைகள் பிறப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.தமிழகத்தில்  பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு  இந்தக் குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைக் களைவதற்காக 2013ல்  ஜெயலலிதா அரசு மருத்துவக் காப்பீட்டில் காப்ளியர் இம்ப்ளண்ட் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

இப்போது அடுத்த கட்டமாக அறுவை  சிகிச்சைக்குப் பிறகு, பேச்சுப்பயிற்சியும் ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அறுவை  சிகிச்சை செய்த குழந்தைகளுக்குக் காதில் பொருத்தப்பட்ட கருவிகள் பழுதடைந்தால், அதையும் அரசின் செலவிலேயே மாற்றித்தர தமிழக சுகாதாரத் துறை 1.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick