தெய்வத்தான் ஆகாதெனினும் - படிப்பதைப் பரப்புவோம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்ப்பிரபா, படம்: ஜெ.வேங்கடராஜ்

``ஒரு புத்தகத்தை நாம படிச்சு முடிச்சுட்டாலே அது நமக்குச் சொந்தமில்லைங்கிறது என் கருத்து” என்று சொல்லும் மகேந்திரகுமார்,  மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் இருந்த நூல்களை எல்லாம் சிறிய பீரோவில் வைத்துத் தெருவோரத்தில் கொண்டுவந்து வைத்தார்.  அவர் ஆரம்பித்துவைத்த ‘ஆள் இல்லா நூலகம்’, தற்போது தமிழகம் முழுவதும் மொத்தம் 67 இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நூலகம் தொடங்கிய நோக்கத்தைப் புகைப்படங்களுடன், தெரிந்த எழுத்தாளர்கள், நண்பர்கள் அனைவரிடமும் தகவலாக அனுப்பியிருக்கிறார். விளைவு, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் சேர்ந்திருக்கின்றன. மகேந்திரகுமார் செய்துவரும் இந்தப் பணி, சுற்றுவட்டாரத்தில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. அவர் செய்வதுபோன்றே தங்கள் வசிப்பிடங்களில் செய்ய மற்றவர்களுக்கும் ஆசை. ஆனால், அவர்களிடம் புத்தங்கள் இல்லை எனத் தெரிந்தவர் தன்னிடம் உள்ளவற்றை கட்டைப்பையில் போட்டு வெயில், மழை பாராது கையோடு கொண்டுசேர்க்க... அப்படித்தான் பரவலானது இந்த ஆள் இல்லா நூலகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்