பணம் பழகலாம்! - 9 | Financial Awareness - Medical Insurance - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

பணம் பழகலாம்! - 9

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சொக்கலிங்கம் பழனியப்பன்

ன்றைய தலைமுறையின் மிகப்பெரிய சவாலே மருத்துவச் செலவுகள்தான். வாழ்க்கையில் பல செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் சமாளிக்க முடியும். ஆனால், மருத்துவச் செலவுகளை அப்படித் துல்லியமாகத் திட்டமிட முடியாது. அதற்கென ஒரு நிதியை ஒதுக்கி வைத்திருந்தாலும், இன்றைய மருத்துவச் செலவுகள் நமது திட்டமிடலை எல்லாம் மிஞ்சுகின்றன.

மருத்துவச் செலவுகளை, ஒரு சாமான்யன் சமாளிப்பதற்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்தான் ஒரே வழி. நீங்கள் பெரிய தனியார் நிறுவனங்களில் அல்லது அரசாங்க வேலையில் இருந்தால், உங்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் உங்கள் நிறுவனம் அல்லது அரசாங்கம் மூலம் கிடைத்திருக்கும். சிறிய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு, இ.எஸ்.ஐ மூலம் இந்த ஹெல்த் கவர் உள்ளது. பிராக்டிகலாகப் பார்த்தால் நமக்கு அதிகமாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேவைப்படுவது நம் ஓய்வுக்காலத்தில்தான்.

இன்றைய சூழலில் ஒவ்வொருவரும்  குறைந்தது ஐந்து லட்சம் ரூபாய்க்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது பாது காப்பானது. பல பொதுத்துறை மற்றும் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவ னங்கள், இன்று ஹெல்த்இ ன்ஷூரன்ஸைப் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலையில் வழங்குகின்றன. சிறந்த ஆலோசகரின் உதவியுடன் உங்களுக்குத் தேவையான இன்ஷூரன்ஸை எடுத்துக்கொ ள்ளு ங்கள். ஒருமுறை எடுத்த பிறகு, அந்த பாலிசியை உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்வது மிக முக்கியம். வேலையில் இருப்பவர்களும் தங்களது கம்பெனி கொடுத்திருக்கும் பாலிசி தவிர, தங்களது குடும்பத்துக்கு என பிரைவேட்டாக ஒரு பாலிசியை வைத்துக்கொள்வது நல்லது. 

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி கவரேஜுடன் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம் அல்லது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து ஒரே கவரேஜை எடுத்து க்கொள்ளலாம். இரண்டாவது வகை பாலிசியை `ஃபுளோட்டர் பாலிசி’ என்கிறார்கள். கணவன் - மனைவி இடையே வயது இடைவெளி குறைவாக இருந்தால் ஃபுளோட்டர் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. தற்போது பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்  50 லட்சம் ரூபாய் வரை  பாலிசிகளை வழங்குகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க