தேசத்தின் நிழல்

கார்த்தி

னித உறவுகளின் சிக்கல்களை, தவறின் விளிம்பில் வாழ்ந்து, பின்பு திருந்தும் சூழ்நிலைக் கைதிகளை மீண்டுமொருமுறை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி.

டீனேஜில் தவறான வழியில் பணம் ஈட்டும் ஆமீர், வாழ்வின் அனைத்துத் துயரங்களையும் அனுபவித்துவிட்டு அடுத்த துன்பத்துக்குத் தயாராகும் அக்கா தாரா. இவர்களின் வாழ்வுச்சூழல், கிடைக்கும் புது உறவுகள் என படம் நெடுக, கதாபாத்திரங்களின் வலிகளை முன்வைத்து நகர்கிறது ‘ பியாண்ட் தி கிளவுட்ஸ்’.

‘சில்ரன் ஆஃப் ஹெவன்’,  ‘தி கலர் ஆஃப் பாரடைஸ்’ என தன் திரை வாழ்க்கை முழுவதிலும் மனித மனங்களின் ஆற்றாமைகளையும், வலிகளையும், புறக்கணிப்பையும் சொல்லி வந்த மஜித் மஜிதி , முதல் முறையாக இந்திய சினிமாவில் தடம் பதித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick