குடி உயிரை எடுக்கும்!

தமிழ்ப்பிரபா - படங்கள்: எல்.ராஜேந்திரன் - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 “ ‘அப்பா வந்தா தேடுவார்ண்ணே, சொல்லிட்டுப் போ’ன்னு சொன்னேன். `தேடட்டும்’னு சொல்லி விறுவிறுன்னு நடந்துபோச்சு. அதுதான் எங்க அண்ணன் கடைசியா என்கூட பேசினது’’ என்ற தனுஸ்ரீயால் அதற்குமேல் பேச இயலவில்லை. அக்கா அழுவதைப் பார்த்து தங்கை முத்துச்செல்வியும் அழுகிறாள். பாலச்சந்தர் மட்டும் அழாமல் எங்கேயோ வெறித்துக்கொண்டிருந்தான். அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தினேஷின் தம்பி, தங்கைகள்தான் இவர்கள் மூவரும்.

சங்கரன்கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலையிலிருந்து பிரிந்து குறுகலான மண்பாதையில் நுழைந்தால் உள்ளே இருக்கும் குறுங்கிராமம் ரெட்டிபட்டி. மருத்துவர் ஆகி தன் கிராமத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வு எழுதவிருந்த தினேஷ், இறுதியில் தன் உயிரையே    போக்கிக்கொண்டார். குழந்தைகளுடன் அப்பா மாடசாமி, தலையில் கை வைத்தபடி ஓர் ஓரமாக உட்கார்ந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick