புக் மார்க்

``பல வரலாற்றாசிரியர்கள் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை குறித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், பிரிவினைக் காலத்தைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நீங்கள் தேடவேண்டியது அந்தக் காலத்தின் வன்முறைகளை அல்ல; அன்புக் கதைகளை. மதம் பிரிக்கும் கருவியாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், உலகத்துக்கு இந்தச் செய்திகள்தான் தேவை’’ என்கிறார் `From Quetta to Delhi: A Partition Story’ நாவலாசிரியர் ரீனா நந்தா. பிரிவினைக் காலத்தின் அரசியல் நிலவரம் மட்டுமல்லாமல், பிரிவின் வலி, இடப்பெயர்வின் காரணமாக மனிதர்களுக்கு நிகழ்ந்த சமநிலைக் குலைவு ஆகியவற்றை அழுத்தமாகப் பேசுகிறது இந்த நாவல். பிரிவினையின் காரணமாக பாகிஸ்தானின் க்வெட்டாவிலிருந்து டெல்லிக்கு வந்த குடும்பங்களில், நாவலாசிரியரின் குடும்பமும் ஒன்று. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு, எதிர்பாராத அளவுக்குத் திரண்டது மக்கள் கூட்டம்.  அவர்களில் பலர் பாகிஸ்தானின் க்வெட்டாவில் வசித்தவர்கள் என்பதுதான் ஹைலைட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick