சோறு முக்கியம் பாஸ்! - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

தொழிற்சாலையைப்போல  பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அந்த உணவகம். பத்துக்குப் பத்து அறையில் கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட் இறக்கி, அதனுள்ளே நாற்காலி போட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், ஈயக் குண்டானில் சாதத்தை வடித்து வடித்து, வைக்கோல் நிரப்பப்பட்ட ஓலைப்பாயில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சட்டிகளில் கறிக்குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. பகல் 11 மணிக்கெல்லாம் இருக்கைகள் நிறைந்துவிடுகின்றன. கரைவேட்டிக்காரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்கு எதிரில் இருக்கிற, ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலில்’தான் இந்தக் காட்சி. முன்னர் இந்த உணவகத்துக்குப் பெயர், ‘கூரைக்கடை.’ பனை ஓலைக் கொட்டகையில் இயங்கியதால் அந்தப் பெயர். இப்போது கொஞ்சம் முகம் மாறியிருக்கிறது. ஆனால், சுவையும் பாரம்பர்யமும் மாறவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்