விகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்!” - விஷால்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

 “நடிப்பு, நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், சினிமா பிரச்னைகள்னு நேரம் இல்லாம ஓடிக்கிட்டு இருக்கீங்க.இவ்வளவு பிஸியிலேயும் ஃபிட்னெஸை எப்படி மெயின்டெயின் பண்றீங்க?”

- தார்மிக் லீ

“கடந்த ரெண்டு மாசமா என்னால ஜிம்முக்குப் போக முடியலை. மார்ச் மாதம் ஸ்டிரைக் அறிவிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் எங்க டீம்ல எல்லோரும் சரியா தூங்குனோமான்னுகூட தெரியலை. நிறைய நேரம் மீட்டிங்கிலேயே போயிடுச்சு. எனக்கு ஷூட்டிங் இருந்தா ஸ்பாட்டுக்கு சைக்கிள்லதான் போவேன். என் வீடு அண்ணா நகர்ல இருக்கு. மீனம்பாக்கத்துல ஷூட்டிங்னாலும் சைக்கிள்லயே போயிடுவேன். இது ஆர்யாவிடமிருந்து நான் கத்துக்கிட்டது. பிஸியா இருந்தாலும் கிடைக்கிற சின்னச் சின்ன கேப்லேயும் வொர்க் அவுட் பண்ணுவேன். ஏன்னா, ஒரு நடிகருக்கு அது ரொம்ப முக்கியம். ஒரு நாளில் 16 மணி நேரம் வொர்க் பண்ணினாலும், கிடைக்கிற அரைமணி நேர கேப்ல வொர்க் அவுட் பண்ணுனா,  நல்ல ஃபீல் கொடுக்கும். இப்போ ஸ்டிரைக் முடிஞ்சிருச்சு. இனிமேல் மறுபடியும் வொர்க் அவுட் ஸ்டார்ட் பண்ணணும். எனக்காக லிங்குசாமி காத்திருக்கார். ‘சண்டகோழி 2’ படத்துக்காக பழைய ஃபிட்டுக்கு மாறணும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick