தெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்ப்பிரபா - படம்: க.மணிவண்ணன்

 “அந்தம்மாவுக்குப் பேரப் பிள்ளைங்க பிறந்து, அந்தக் குழந்தைங்களோட குரல்களை மட்டும்தான் கேட்டிருக்காங்களே தவிர, ரொம்ப வருஷமாகியும் அந்தக் குழந்தைகளைப் பார்க்க முடியலை. கண் ஆபரேஷன் பண்ணி, கட்டு பிரிச்ச உடனே அந்தப் பிள்ளைகளைப் பார்த்து அவங்க அழுத காட்சி, என்னால மறக்கவே முடியாது சார்” எனச் சொல்லும் மருத்துவர் பாரிகுமார், இப்படிப் பல நெகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி சந்திப்பவர்.

தருமபுரியில் கண் மருத்துவமனை வைத்திருக்கும் பாரிகுமார், ஏழை மக்களுக்கு  இதுவரை ஏறக்குறைய 15,000-த்துக்கும் மேற்பட்ட இலவச கண் அறுவைசிகிச்சை செய்திருக்கிறார். அப்பா, வன அதிகாரி. அம்மா, ஆசிரியை. சேவை மனப்பான்மைகொண்ட இருவரின் பணிகளையும் அருகில் இருந்து பார்த்து வளர்ந்தவர் பாரிகுமார். `` `நீ மருத்துவம்தான் படிக்கணும். படிச்சுட்டு மக்களுக்கு சேவை செய்யணும்’னு என்னைவிட எங்க அப்பா-அம்மா ரொம்ப உறுதியா இருந்தாங்க” என்கிற பாரிகுமார், கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவச் சேவை புரிந்துவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick