சோதனைச்சாவடி - சிறுகதை

கவிப்பித்தன் - ஓவியங்கள்: ஸ்யாம்

கோடை வெயில், பெட்ரோல் விலையைப் போன்று விறுவிறுவென ஏறிக்கொண்டிருந்தது. வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் சிதம்பரத்தின் நடு உச்சிக்கு மேல் கொதித்துக்கொண்டிருந்தான் சூரியன்.     

இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்த வயதான ஒரு புளியமரம், சிதம்பரத்தின் வலதுபுறம் ஒற்றைக் கிளையுடன் நின்றிருந்தது. அதன் வெக்கை, அங்கே மேலும் மேலும் உஷ்ணத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

தலைமைக் காவலர் இருவர், சாலையில் வரும் கார்களை நிறுத்தி அதன் டிக்கிகளைத் திறந்து காட்ட, தலையைச் சாய்த்து சாய்த்து உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த சிதம்பரத்துக்கு எரிச்சலாக இருந்தது.

சவுக்குத்தோப்புபோல அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த அவரது தலைமுடிகளுக்கு இடையிலிருந்து மணல் ஊற்றைப்போல சளசளவெனக் கொப்புளித்துக்கொண்டிருந்த வியர்வை, நெற்றியில் இறங்கி மூக்கில் வழிந்து துளித்துளியாய்ச் சொட்டிக்கொண்டிருந்தது. சூட்கேஸ்களையும் கைப்பைகளையும் திறக்கச் சொல்லி தலையைக் குனிந்து உள்ளே பார்க்கிறபோதெல்லாம் சொட்டு சொட்டென விழுந்த வியர்வைத்துளிகளைத் துடைத்துக்கொள்ளக்கூட அவருக்கு நேரமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick