“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!” | Interview With Actress Rakul Preet Singh - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/05/2018)

“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்!”

சுஜிதா சென்

“நான் பஞ்சாபிப் பொண்ணு. ஆனா, தெலுங்குப் படங்கள்ல அதிகமா நடிக்கிறதுனால, தெலுங்கு சரளமா பேசக் கத்துக்கிட்டேன். இப்போ, தமிழ் கத்துக்கிட்டிருக்கேன்.” - விழிகள் விரியப் பேச ஆரம்பிக்கிறார், ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவின் புதிய செல்லம்.

“எப்படி இருக்கு தமிழ் சினிமா?”

“செமையா இருக்கு. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் காட்ட வேண்டியிருக்கு. செல்வராகவன் சார் படத்தில எனக்கும் சூர்யா சாருக்கும் சீரியஸான கதாபாத்திரம். சிரிக்கக்கூட நேரமில்லாதவங்க மாதிரி இருப்போம். செல்வா சார் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் வெச்சிருக்கிற வரையறைகள் ரொம்பப் பிரமாதமா இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்ல சூர்யா சார் ஒரு நடிகர் மாதிரியே தன்னைக் காட்டிக்க மாட்டார். நேரத்துக்கு வர்றது தொடங்கி, எல்லோர்கிட்டேயும் கலகலப்பா பேசுறது வரை... பக்கா ஜென்டில்மேன்!.