இன்ஜினீயரிங் சேர இணையம் போதும்! | Engineering counselling goes online - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/05/2018)

இன்ஜினீயரிங் சேர இணையம் போதும்!

ஞா.சக்திவேல் முருகன் - படங்கள்: பிரியங்கா

சான்றிதழ்களைச் சேகரித்து , பஸ் புக் பண்ணி, சென்னையில் வந்து இறங்கி, பதற்றத்தோடு அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, பிடித்த பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும். கவுன்சிலிங் காலம் என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோருக்கும் படபடப்பான காலம் தான். இனி, இந்த பிரச்னையில்லை. வீட்டில் இருந்துகொண்டே கல்லூரியைத் தேர்வுசெய்து கொள்ளலாம்.  

21 வருடங்களாக செயல்பாட்டில் இருக்கும் பொறியியல் கவுன்சலிங் நடைமுறைகளை இந்தாண்டு முதல் மாற்றி அமைத்திருக்கிறது தமிழக அரசின் உயர்கல்வித்துறை. பொறியியல் கலந்தாய்வுக்கு உதவும் வகையில்  தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், மே 30-ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆன்லைனில் (www.tnea.ac.in, www.annauniv.edu/tnea2018) பதிவு செய்துகொள்ளலாம். ஜுன் மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள்,  மாணவர்கள் தேர்வுசெய்த உதவி மையத்திலேயே நடக்கும்.