‘மகாநடி’ என்னும் மகாநதி! | The story of the Nadigaiyar Thilagam - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/05/2018)

‘மகாநடி’ என்னும் மகாநதி!

விகடன் டீம்

டிப்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த சாவித்திரியின் புன்னகையும் கண்ணீரும் நிறைந்த அசல் வாழ்க்கையையும், வெற்றிகளும் தோல்விகளும் நிரம்பிய சினிமா வரலாற்றையும் ஒரு பத்திரிகையாளரின் பார்வையில் விவரிக்கிறது ‘நடிகையர் திலகம்’.

‘மக்கள் வாணி’ பத்திரிகை நிருபரான மதுரவாணிக்கு (சமந்தா), கோமாவிலிருக்கும் நடிகை சாவித்திரி பற்றி செய்திக் கட்டுரை எழுதுவதற்கு அசைன்மென்ட் தரப்படுகிறது. வேண்டா வெறுப்பாக சாவித்திரியைப் பற்றி செய்தி சேகரிக்கச் செல்லும் மதுரவாணி, சாவித்திரி வாழ்க்கையோடு தொடர்புள்ள பல்வேறு நபர்களின் வழியாக ‘நடிகையர் திலகம்’ குறித்துக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வியக்கிறார். அவரது வாழ்க்கைக் கதையை எழுதுகிறார். கூடவே பார்வையாளர்களான நாமும் பயணிக்கிறோம்.