பாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்

ல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும்  மலையாள ரீமேக் பாஸ்கர்.

அம்மாவை இழந்த சிறுவன் தன் அப்பாவையும், அப்பாவை இழந்த சிறுமி தன் அம்மாவையும் இணைத்துவைத்து புது ரேஷன் கார்டு வாங்க திட்டம் போடுகிறார்கள். ஆனால், போட்டுவைத்த காதல் திட்டம் ஓகேவாகும் முன் பல திடுக்கிடும் திருப்பங்கள் திட்டத்தைத் தவிடுபொடியாக்கு கின்றன. இறுதியில், குழந்தைகளின் திட்டம் வெற்றியடைந்ததா, இல்லையா என்பதை காமெடியாகச் சொல்ல ரொம்பவே முயன்றிருக்கிறார்கள் பாஸ்கர் குடும்பத்தார்.

எதிலும் அடாவடித்தனம் காட்டித்திரியும் கோடீஸ்வரத் தொழிலபதிராக அர்விந்த் சுவாமி. படத்தின் தலைப்பிலுள்ள `ராஸ்கல்’ எனும் வார்த்தைக்குத் தன் நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். அடியாட்களை அடித்துப் பறக்கவிடுவது, சூரி, ரோபோ சங்கரோடு சேர்ந்து காமெடி செய்வது, ராகவனிடம் பாசத்தைக் கொட்டுவது என எல்லா ஏரியாவிலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick