“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு!” | Interview With IAS T. Udhayachandran - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு!”

மீனாட்சி சுந்தரம் - படம்: பா.காளிமுத்து

“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”.. தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் வித்தியாசமாகக் காட்சி தருகிறது முகப்பு வாசகம். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, “நம் மாணவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து இந்த புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்... நம் மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் வசமாக்க ஆரம்பிப்பார்கள்” எனப் பெருமிதத்துடன் ஒலிக்கிறது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் குரல்.

“எந்த விதத்தில் தனித்தன்மையானவை இந்தப் புத்தகங்கள்?”


“அந்தந்தத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் சிந்தனையாளர்கள்தான் பாடத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். இந்தக் கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.

ஒரு நுழைவுத்தேர்வை எழுதுவதில் தொடங்கி, நேர்காணல், என்ன படிக்கலாம், எதைப் படிக்கலாம் என்று நம் மாணவர்களுக்கு இருக்கும் தலைவலிகள் பற்றி நிறையவே யோசித்தோம். வெறும் எழுத்தால் நிரப்பப்பட்ட புத்தகங்களாக இருக்கக் கூடாது என முடிவெடுத்ததால் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறோம்.  புத்தகங்கள் முழுக்க QR CODE இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஸ்கேன் செய்தால் அனிமேட் செய்த வீடியோக்களுக்குச் செல்லும். ஆசிரியர்கள் நடத்துவதில் சந்தேகங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை ஸ்கேன் செய்தால் விர்ச்சுவல் ஆசிரியர் இணையம் மூலம் பாடம் எடுப்பார். பாடங்கள் தொடர்பாக 5 நிமிட வீடியோக்களும் தயார் செய்யப் பட்டிருக்கின்றன.

ஐ.சி.டி கார்னர் என்று ஒரு பகுதி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம் இந்தியப் பாடப்புத்தகங்களிலேயே இது புதிய வடிவம். பாடம் தொடர்புடைய இணையப் பயன் பாடுகளைக் கொடுத்திருப்போம். தொலைத்தொடர்பு அம்சங்கள் அத்தனையும் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும். ஆப் வடிவங்கள், விக்கிபீடியா பக்கங்கள், வெப்சைட்டுகள் எனப் பல்வேறு இணையத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick