மோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும் | Four years of Narendra Modi government - Ananda Vikatan | ஆனந்த விகடன்

மோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்

ச.ஸ்ரீராம்

“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில் முழங்கினார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. இந்தியா முழுவதும் வீசிய மோடி அலையால், பிரதமராகவும் ஆனார். இதோ... அவர் பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது, மோடி தேர்தல் தேர்வை எழுத.  இந்த நான்காண்டுகளில் ‘Welcome Modi’யையும் பார்த்துவிட்டார்; ‘Goback Modi’யையும் பார்த்துவிட்டார். நான்காண்டுகள் மோடியின் ஆட்சி சாதித்தது என்ன, சறுக்கியது எவற்றில்...?

‘வளர்ச்சி ஒன்றே தன் ஆட்சியின் இலக்கு’ என்பது மோடியின் தாரக மந்திரம். அதற்கேற்ப, ‘மேக் இன் இந்தியா’, ‘தூய்மை இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’ என திட்டங்களை வரிசையாக அறிவித்தார். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மோடியின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick