சர்வைவா - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அதிஷா - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

பால் போலே பதினாறில்...

விட் எழுதிய  ‘மெட்டாமோர்போசஸ்’ காப்பியத்தில் `கலாட்டியாவின் கதை’ வருகிறது.

பிக்மாலியன் புகழ்பெற்ற சிற்பி. பெண்களைக் கண்டாலே வெறுப்பு. எந்தப் பெண்ணும் அழகானவளாக பிக்மாலியன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால் கன்னிப்பையனாகவே காலம் கழிக்கிறான். காத்திருந்து காத்திருந்து, முழுமையான ஒரு பெண்ணைத் தந்தத்தில் சிலையாக வடிக்கிறான். அந்தச் சிலைக்கு `கலாட்டியா’ எனப் பெயர் சூட்டுகிறான். கலாட்டியா என்றால் `பால்வெண்மையான பெண்.’

அந்தச் சிலையைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். சிலைக்கு முத்தமிட்டு முத்தமிட்டுக் கட்டியணைத்துக் காதல் புரிவான். நிஜமான பெண் போலவே இருந்தாலும் கலாட்டியாவுக்கு உயிரில்லையே! அந்தக் கவலையிலேயே நாள்கள் ஓட, பிக்மாலியன் வாட... அந்த சமயத்தில் காதல் கடவுளான ஏப்ரோடைடியைக் கொண்டாடும் திருவிழா ஊரில் கொண்டாடப்படுகிறது.

காதல் வேண்டுதல்களை ஏப்ரோடைடியிடம் வைத்தால் அது நிச்சயம் பலிக்கும் என்பது ஐதீகம், கோயிலுக்குச் சென்று ஏப்ரோடைடியிடம் “எனக்கு ஒரு காதலி வேண்டும். அந்தப் பெண் உயிருள்ள கலாட்டியாவைப்போல இருக்க வேண்டும்’’ எனச் சூசகமாக வேண்டிக்கொள்கிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick