சோறு முக்கியம் பாஸ்! - 36

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் நல்ல உணவகத்தை அடையாளம் காண்பதற்குள், போதும் போதுமென்றாகி விடுகிறது. சொந்த வாகனத்தில் செல்பவர்களாவது பரவாயில்லை.  பேருந்தில் செல்பவர்கள் பாடுதான் பரிதாபம். தப்பித்தவறி உள்ளே நுழைந்துவிட்டால், அவ்வளவுதான். அவர்கள் என்ன வைக்கிறார்களோ அதைத்தான் சாப்பிட வேண்டும். பரோட்டா வைத்துவிட்டு, `தொடுகறி என்ன வேண்டும்?’ என்று கேட்பார்கள். அதற்குத் தனியாகக் காசு. வாயில் வைக்க முடியாது. அவ்வளவு மோசமாக இருக்கும். தோசை கேட்டால் அரதப்புளிப்பாக ஒரு வஸ்துவைக் கொண்டுவந்து போடுவார்கள். பில்லைப் பார்த்தால் கதிகலங்கிப் போகும். எதுவும் கேட்க முடியாது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick