சொல்வனம்

அதிகாரத்தின் நிழல்

வே
றென்ன வேண்டும் பிரபு
உங்கள் அக்குள் வாசனையை
எங்கள் உடலெங்கும் படரவிட்டிருக்கிறோம்.

உங்கள் காலணிகளை எங்கள்
மகுடமாக்கிக்கொண்டோம்.

உதிர்ந்த உங்கள் ரோமங்களின்
வரலாறைப் புகழுகின்றோம்.

உங்கள் உதடுகள்
வெளியேற்றியதெல்லாம்
வேதங்கள் ஆக்கினோம்.

கிழிந்த உங்கள் உள்ளாடைகளை
சங்கத்தின் கொடியாக்கினோம்.

உங்கள் நிழற்படத்தைத்தான்
தொழுதுகொள்கிறோம்.

நீங்கள் பார்க்காத
நேரங்களில் மட்டுமே
எங்கள் திசையில் அதிகாரம்
குடியேறிவிடுகிறது.

நீங்கள் ஊருலகத்தைச் சுற்றுவதையெல்லாம்
திரையில் காட்டி வளர்ச்சி என்று
புளகாங்கிதமடைகின்றோம்

நீங்களே ஆக்கலும் அழித்தலும்.

பாருங்கள் பிரபு
நாங்கள்
சுதந்திரமானவர்கள்தான்
உங்கள் அடிமைகள் என்பதைத் தவிர
வேறென்ன வேண்டும் பிரபு.

- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick