சொல்வனம்

மணவிழா

வா
யிலில்
யாசகர்கள் கையேந்தி நிற்க
வயிறு வீங்கிய இலை
பிரசவிப்பது குப்பைகளை.

பரிமாறும்போது
தடுக்காதவை
இடம் கிடைத்த அவசரத்தில்
கழுவாதவை.

பீடா போட்ட பிறகு
ஐஸ்கிரீம் குளிர
வாய் கொப்புளிக்க
வாஷ்பேசினில்
தலை குனியும் வேளை
யாரும் பார்க்காமலிருக்க வேண்டும்.

மொய் எழுதாத விழாக்களில்
பெயருக்கு மேலே
தொகையை எழுதிய கவருடன்
கைகுலுக்கும் நிழற்படம்
முக்கிய சாட்சி.

காலணிகள் தொலையாத
கல்யாண மண்டபத்தில்
புகையும் மேடையில்
புனிதப் பொருள்களுடன்
சரிசமமாய் உலாவும் காலணிகள்
சமத்துவத்தின் காரணிகள்.

-  காரைக்குடி சாதிக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick