இன்பாக்ஸ்

சென்றவாரம் டெல்லியில் 20 அடி ஆழமுள்ள செப்டிங் டாங்கில் இறங்கி சுத்தம் செய்யும்போது அனில் என்ற துப்புரவுத் தொழிலாளி இறந்துபோனார். வறுமையான நிலையில் இருந்த அனிலின் குடும்பத்தினர் அடக்கம் செய்யக்கூட பணமின்றித் தவித்தனர். இதை ஸ்டேடஸாக ஆன்லைனில் ஒருவர் வெளியிட, விஷயம் நாடு முழுக்க வைரலானது.  அடுத்த ஒரே நாளில் இந்தியா முழுவதிலுமிருந்து, அனிலின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் வரை உதவிகள் குவிந்துவிட்டன.  அன்பே சிவம்!


1972க்குப் பிறகு நிலாவுக்கு யாருமே சென்றதில்லை. 46 ஆண்டுகளுக்கு பிறகு நிலாவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவிருக்கிறது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம். இந்தப் பயணத்தில் இடம்பெறப்போகிற முதல் நபர் ஜப்பானிய கோடீஸ்வரரான யுசாக்கு மேசாவா. திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் 2023க்குள் அவர் நிலவுக்குக் கிளம்பிவிடுவார்.  தன்னோடு எட்டு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களையும் அழைத்துச்செல்லவிருக்கிறார்.  உலகில் இருக்கிற யார்வேண்டுமானாலும் யுசாக்குவிடம் விண்ணப்பிக்கலாமாம்.  எழுத்தாளர்கள் ப்ளீஸ் நோட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick