கைகொடுத்தோம் கேரளாவுக்கு! | Vikatan charitable trust helps Kerala with collected Relief fund - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/10/2018)

கைகொடுத்தோம் கேரளாவுக்கு!

கஸ்ட் 18, 2018. கொச்சி கடற்படைத் தள மருத்துவமனையில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சபீதா ஜபீலுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அவர் வீட்டிலிருந்து இரண்டு கி.மீ தூரமே உள்ள மருத்துவமனைக்கு வர இந்தியக் கடற்படையின் ஹெலிகாப்டர் தேவைப்படும் என்று.  அதேபோல் திருச்சூரைச் சேர்ந்த பத்தே வயது நிரம்பிய நந்தனாவிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தன்னுடைய இந்த வருடப் பிறந்தநாளைப் புது நண்பர்களுடன் நிவாரண முகாமில் கொட்டும் மழைக்கிடையே கொண்டாடுவோம் என்று. ஆம்... ஆகஸ்ட்டில் கேரளா அந்த வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது. 483 உயிரிழப்புகள்; 57,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் சீரழிவு; 14.5 லட்சம் பேர் முகாம்களில் தஞ்சம் என்று பெரும் பேரிடரைச் சந்தித்தது கேரளம்.

[X] Close

[X] Close