மன்னாரு & கம்பெனி

குணா கந்தசாமி, ஓவியம்: ஹாசிப்கான்

சொர்க்கம் மற்றும் நரகத்திற்குச்
செல்லும் வழிகளைக் குறித்த
தொடர்பற்ற சிந்தனைகளூடே
இருசக்கர வாகனத்தில் பயணிக்கையில்
இது அலுவலகத்திற்குச் செல்லும் வழி
என்னும் மெய்யுணர்ந்த திடுக்கிடலில்
தத்துவத்திலிருந்து தரையிறங்கிய
நினைப்புக்கு உடனே ஓர் ஏக்கம்
உலகத்தில் நுழைந்து-அதன்
உயிர்ப்பு கூடிய சந்தடிகளை
இயங்கும் அதன் அழகுகளை
உணரவேண்டிய காலத்தில்
வெற்றிகளை மட்டுமே கோரும்
அலுவலகத்திற்குப் போகவேண்டியிருக்கிறது
நமக்குத் தொப்பை சரிந்துவிட்டது
வாழ்வு தேங்கிவிட்டதின்
வாய்வுக்கோளாறு வேறு
பழகியதை மாற்றும் தெம்புமில்லை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick