அன்பே தவம் - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

`வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.’


- மாணிக்கவாசகப் பெருமான் கரைந்து உருகிச் சொன்னார். `இறைவா... அளவற்ற ஆற்றல் உடையவனே. நீ விண்ணிலே நிறைந்திருக்கிறாய். மண்ணிலே மறைந்திருக்கிறாய். காற்றில் கலந்திருக்கிறாய். நீரில் உறைந்திருக்கிறாய். நெருப்பில்  இருக்கிறாய். பிரபஞ்சத்திலும், பஞ்சபூதங்களிலும் கலந்து, கரைந்து, வியாபித்திருக்கிறாய்.’ அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் உன்னை நாங்கள் திருக்கோயில் எழுப்பி, எழுந்தருளச் செய்து, அருள்பாலிக்கச் செய்ய வேண்டுகிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick