நான்காம் சுவர் - 3 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikata | ஆனந்த விகடன்

நான்காம் சுவர் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பாக்கியம் சங்கர்

ல்லெண்ணெயை உள்ளங்கையில் ஊற்றி திருப்பாலின் உச்சந்தலையில் தேய்த்தாள் அலமேலு. கோவணம் மட்டும் கட்டியபடி திருப்பால் எண்ணெய் வழிய பாப்பம்மாளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார். இட்லிக் குண்டானின் மூடியைத் திறந்து இட்லியைக் குத்திப் பதம் பார்த்துக்கொண்டாள் பாப்பம்மாள். புதுச்சட்டையில் பளிச்சென வந்து நின்றான் காந்தி. கையில் மிளகாய்ப் பட்டாசும், ஊதுபத்தியும் வைத்திருந்தான். “காந்தி... சாப்புட்டுப் போயி வெடிடா… கொஞ்ச நேரத்துல கறி வெந்துடும்” எண்ணெயின் ரெண்டு சொட்டுகளைத் திருப்பாலின் கட்டை விரல் இடுக்கில் விட்டபடி சொன்னாள் அலமேலு. “பட்டாசு வெடிச்சுட்டு வந்து சாப்புட்றன் சின்னம்மா” என்று பயல்களோடு வெளியேறினான் காந்தி. கனிந்து சிவந்து களிகூர்ந்து இருந்தன கறிகள். இந்த மாதிரியான விசேஷ நாள்களில்தான் இருவீடும் ஒருவீடாய்க் காட்சியளிக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick