கேம் சேஞ்சர்ஸ் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

திரிகள் இல்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது. நம்மைச் சாதிக்கத் தூண்டுபவர்கள் நம் எதிரிகள்தாம். ஆண்டி ரூபினுக்கு இரண்டு எதிரிகள். ஒன்று ஆப்பிள்; இன்னொன்று மைக்ரோசாப்ட். இந்த ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றிபெற்றுவிட முடியுமென நம்பினார் ஆண்டி ரூபின். ஆனால் ஒரு பிரச்னை. அன்று அவரால் அலுவலகத்துக்கு வாடகை தர முடியாத சூழ்நிலை. கேட்க முடிந்த அனைவரிடமும் கேட்டாகிவிட்டது. கடைசியாக மிச்சமிருந்த பெயர் ஸ்டீவ். அவரிடம் கேட்டுவிட்டார். ஸ்டீவுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. உடனே பணத்தை ஆன்லைனில் அனுப்பிவிட்டார். வாடகைக்கே இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்த ஆண்டிதான் ஆப்பிளையும் மைக்ரோசாப்ட்டையும் எதிர்த்து ஜெயிப்பேன் என நம்பினார். கொஞ்சம் ஓவர்தான் இல்ல?

இல்லை!

எந்தத் தயாரிப்புக்காக அன்று ஆண்டி கடன் வாங்கினாரோ அதை இன்று உலகம் முழுவதும் 85% பேர் பயன்படுத்துகிறார்கள். போட்டியாளர் ஆப்பிளையோ 11% பேர்தான். மைக்ரோசாப்ட் பந்தயத்திலேயே இல்லை. ஆண்டி ரூபனின் அந்த ஜீபூம்பா ‘ஆண்டிராய்டு.’ 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்