வீரயுக நாயகன் வேள்பாரி - 100 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/09/2018)

வீரயுக நாயகன் வேள்பாரி - 100

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியங்கள்: ம.செ.,

முதன்முறையாக இன்றைய போரின் பிற்பகுதியில்தான் பறம்பின் விற்படையினருக்கு முழுமையாக ஏறித்தாக்கி முன்னேறும் அனுமதியைக் கொடுத்தான் முடியன். இந்த உத்தரவுக்காகத்தான் போர் தொடங்கிய நாளிலிருந்து உதிரன் காத்திருந்தான். விற்படையின் முழு ஆற்றலும் பீறிட்டுக் கிளம்பியது. விரி அம்புகளும் பகழி அம்புகளும் இடைவெளியின்றிச் செலுத்தப்பட்டன. பறம்புப்படையை முற்றுகையிடத் துணிந்தவனுக்கு தாங்கள் யார் என்பதை உணர்த்த, ஒவ்வொரு வீரனும் துடித்தான். போர்க்களம், இதுவரை காணாத அளவுக்கு மரணத்தைக் கண்டது.  எதிரிகளின் படையை முழுமையாகச் சுற்றிவளைத்த கருங்கைவாணன், நிலைமை இப்படித் தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை. எதிரிகளால் யானைப்படையைப் பிளந்துகொண்டு நண்பகலுக்குள் போர்க்களத்துக்கு ஆயுதங்களைக் கொண்டுவர முடியும் என்பதை அவனால் நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.