சோறு முக்கியம் பாஸ்! - 29

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மையல் ஒரு சுவாரஸ்யமான கலை. தேர்ந்த சமையல் கலைஞர்களைக் கூர்ந்து பார்த்தால், அவர்களுக்குள் கூத்துக் கலைஞர்களுக்குரிய குணாதிசயங்களும் உடல் மொழியும் இருப்பதை உணரலாம். சமைக்கும்  நேரங்களில் அவர்களின் ஐம்புலன்களும் உணவின் மீதுதான் குவிந்திருக்கும். ஒரே நேரத்தில் ஐந்தாறு அடுப்புகளைக் கையாள்வார்கள்.  அத்தனை உதவியாளர்களையும் ஒற்றைப் பார்வையில் கண்காணிப்பார்கள். காதில் மொபைலை வைத்து யாரிடமோ பேசிக்கொண்டு குத்துமதிப்பாக  உப்பை அள்ளிப்போடுவார்கள். மிளகாய்த்தூளை வாரிக் கொட்டுவார்கள்.  நிறம் பார்த்து, உள்ளிருந்துவரும் ஆவியின் தன்மை பார்த்து, கொதித்துத் தெறிக்கும் குமிழின் வடிவம் பார்த்தே  உணவின் தன்மையைத் தீர்மானித்துவிடுவார்கள். ஒரு கல் உப்பு கூடாது, ஒரு துளி காரம் முன்பின் இருக்காது, அப்படியோர் அலைவரிசை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்