என்னஞ்சல்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்புள்ள ‘அவள்’ ஆகிய உனக்கு...

சிலரைப்பற்றி எழுத நினைக்கையில் மட்டும்தான், கீபோர்டில் இருக்கும் பொத்தான்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, ‘என்னை முதலில் பயன்படுத்து’ என்பதுபோல் விரல்பிடித்து  அதன் திசையில் அழைத்துச்சென்று, ஈர்த்து எழுத வைக்கும். Flames-ல் எழுதித் தீர்த்த உன் பெயரை, இந்தப் பத்தாண்டுகளில் பின் எப்போதும் பெயருக்குக்கூட எழுத யாரும் நிர்பந்தித்ததில்லை என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே ஆறுதல். நான் இங்கு வாழ்வதற்கான நேரத்தைக் கடத்திக்கொண்டிருக்க, நீயோ நேரத்தையே கடத்திக்கொண்டிருக்கிறாய். எப்போதேனும் போன் செய்யும்போதும் ஒவ்வொரு தேசத்தின் பெயரைச் சொல்வாய். சில வாரங்களுக்கு முன், லாஸ் ஏஞ்சல்ஸ் என நீ சொன்ன நம்பிக்கையில், கால் செய்து ‘குட் மார்னிங்’ என்றால், உன்னை நெருங்கும் நேரத்தில்தான் இருக்கிறேன் என ஆம்ஸ்டெர்டேம் என்பாய். உன் கடிகார முட்களைப் பிடித்துவிட்டேன் பார்த்தாயா என்பதுபோல் மும்பை என்பாய். சில சமயம் கூட்டன் மார்கன் guten Morgen (ஜெர்மனில் ‘குட் மார்னிங்’) என்பாய். முன்னெப்போதையும் விட, காலம் இப்போதெல்லாம் வேகமாக நகர்கிறது. அணையும் விளக்கு பிரகாசமாக எரிவதுபோல், பூமியும் அசுரப் பாய்ச்சலில் சுழன்றுகொண்டிருக்கிறது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அதுவும் சட்டென நிற்கும் கடைசி நொடிக்காக ஆர்வமாகக் காத்திருக்கிறதோ என்கிற ஐயப்பாடுகளை அறிவியல் எச்சரிக்கைகள் அசரீரியாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. நினைவுகளால் மட்டுமே என்னை வாழவைத்து, விழுங்கிக்கொண்டிருக்கும் நேரக் கடத்தல்காரிக்குப் பல ஆண்டுகளாகப் பேச நினைத்ததில் இருந்த சில கிறுக்கல்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick