மனைவியே துணை! | Politicians Spouses Prayers in Temples - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

மனைவியே துணை!

நாடாளுமன்றத்தேர்தலும், இடைத்தேர்தலும் சேர்ந்து வர, இரண்டிலும் ஜெயிக்க வேண்டுமென்று, எல்லாக் கூட்டணிகளும், எல்லாக் கட்சியினரும் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பார்த்துக் கும்பிடு போடுவதற்கு முன், மக்களுக்குப் பல விஷயங்களை மறக்கும் சக்தியைத் தர வேண்டுமென்று கும்பிடுகிறார்களோ என்னவோ...? தமிழகத்தைப் பொறுத்தவரை, திராவிடக் கட்சித்தலைவர்கள் பெரும்பாலும் தங்களின் மத அடையாளங்களைக் காண்பித்துக்கொள்ள விரும்புவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து, அவர்களின் திருமதிகள்தாம், ஒரு கோயிலும் விடாமல் வேண்டுதல் வைத்துக் கொண்டி ருக்கின்றனர். அத்தகைய மாண்புமிகு மனைவிகள், எந்தெந்தக் கோயில்களில் எப்போதெல்லாம் ‘விசிட்’ அடிக்கிறார்கள் என்று விசாரித்தோம்...