கேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11 | Game Changers: DREAM11 - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)

கேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. கோவா போன்ற சில இடங்கள் விதிவிலக்கு. ஆனால், இணையத்துக்கு ஏது ஊரும் பேரும்? அங்கே சூதாட்ட விஷயங்கள் ஏராளம் உண்டு. அதன் மூலத்தைத் தேடிப் பயணித்தால் இந்தியாவிற்கு வெளியே அதன் வேர்கள் நீளும். சில இணையச் சேவைகள் இந்தியாவிலேகூட உண்டு. ஆனால், அவை சூதாட்டமா என்ற கேள்வியும் உண்டு. அதிலொன்றுதான் ட்ரீம்11 (Dream11). ஆம், தோனியே வந்து “கேலோ கிரிக்கெட் திமாக் சே” என்பாரே... அதுதான்.

ட்ரீம்11 தரும் சேவையை பேன்டஸி கேமிங் (Fantasy gaming) என்கிறார்கள். அதாவது, நிஜத்தில் கிரிக்கெட் (அல்லது வேறு விளையாட்டு) நடந்துகொண்டிருக்க, அதிலிருக்கும் வீரர்களை வைத்து, கற்பனையாக நாமாடும் விளையாட்டு. ட்ரீம்11 எப்படிச் செயல்படுகிறது என்பதை முதலில் பார்த்துவிடலாம். ஏனெனில், அவர்களின் வெற்றி அந்த ஐடியாவில்தான் இருக்கிறது.

சென்னைக்கும் பெங்களூ ருக்கும் ஐ.பி.எல் போட்டி நடக்கிறதென வைத்துக்கொள்வோம். இரண்டு அணியி லிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேட்ஸ்மென், பவுலர், கீப்பர் கொண்டு நாம் ஓர் அணி உருவாக்க வேண்டும். அதில் ஒருவரை கேப்டன் ஆக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன்பே இதை நாம் செய்துவிட வேண்டும். போட்டியில் யார் யார் எவ்வளவு ரன், விக்கெட் எடுக்கிறார்கள் என்பதை வைத்து நம் அணி ஸ்கோர் செய்யும். கேப்டன் எடுக்கும் ஸ்கோர் மட்டும் இரண்டு மடங்காகக் கிடைக்கும். நாம் உருவாக்கும் அணியை ட்ரீம் 11-ல் இருக்கும் பல போட்டிகளில் (Contest) இணைத்துக்கொள்ளலாம். அதாவது ஒரே டீம், ஆனால் பல போட்டிகளில் விளையாடும். யாருடைய அணி அதிக ஸ்கோர் எடுக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். இதுதான் Fantasy gaming.

நீங்க எப்படி பீல் பண்றீங்க