வாசகர் மெகா தேர்தல் போட்டி! | Vikatan Mega Election Contest - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

வாசகர் மெகா தேர்தல் போட்டி!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ஆன்லைனில் உங்கள் கணிப்புகளைப் பதிவுசெய்ய... https://bit.ly/VikatanElectionContest

ஸ்மார்ட் போன் மூலம் உங்கள் கணிப்புகளைப் பதிவு செய்ய கீழே இருக்கும்
‘‘QR Code’-ஐ ஸ்கேன் செய்யவும்...

மோடியின் ஐந்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்து, 17-வது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது இந்தியா. ‘மீண்டும் நரேந்திர மோடி!’, ‘இல்லை, இந்தத் தடவை ராகுல் காந்திதான்’, ‘இல்லையில்லை மூன்றாவதாக ஒருவர் வருவார்’ என இந்தியா முழுவதும் தகிக்கிறது தேர்தல் கனல்.

பி.ஜே.பி., காங்கிரஸ் கூட்டணியைத் தாண்டி மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லாவிட்டாலும் பெரும்பாலான மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் பலத்துடன் விளங்குகின்றன. தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற கணக்கீடுகள் இவர்களை வைத்தே போடப்படுகின்றன. அரசியல் நோக்கர்கள், விமர்சகர்களைத் தாண்டி தேர்தல் முடிவுகளை துல்லியமாகக் கணித்து, கடந்த காலங்களில் சொன்னவர்கள் நமது கணிப்பு கில்லாடி வாசகர்கள். தேர்தல் முடிவுகள் இப்படிதான் இருக்கும் என கச்சிதமாகக் கணிப்பவர்களுக்குத் தேர்தல் தோறும் மெகா பரிசுகளை அளித்து வருகிறது ஆனந்த விகடன். அந்த வகையில் இந்த ஆண்டும் இதோ விகடனின் மெகா போட்டி!

வாசகர்களே, 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் துல்லியமாகக் கணிக்கவிருக்கும் உங்களுக்காக  3,00,000 ரூபாய் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கூப்பனில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில்களை டிக் செய்து அனுப்ப வேண்டியது மட்டுமே. தயாரா?

போட்டிக்கான முக்கிய விதிமுறைகள்

கூப்பன்கள்/ ஆன்லைன் படிவங்கள்/ ஸ்மார்ட்போன் படிவங்கள் என அனைத்து கூப்பன்களும் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 17.04.2019 இந்தத் தேதிக்குப் பிறகு வரும் கூப்பன்கள், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவை செல்லாதவையாகக் கருதப்படும்.
  இந்தக் கூப்பனை ஜெராக்ஸ் எடுத்தும் விடைகளைப் பூர்த்திசெய்து அனுப்பலாம். வேறு தாளில் எழுதி அனுப்பக் கூடாது.
ஒருவரே வெவ்வேறு கணிப்புகள் கொண்ட எத்தனை கூப்பன்களை வேண்டுமானாலும், பூர்த்தி
செய்து அனுப்பலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள், ஸ்மார்ட்போன் படிவங்களுக்கும் இது பொருந்தும்.  
குறிப்பிட்ட ஒரு பரிசுக்கு ஒருவருக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டால், பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்படும்.
ஆசிரியரின் முடிவே இறுதியானது.


கூப்பன்களை அனுப்பவேண்டிய முகவரி: ‘வாசகர் தேர்தல் போட்டி-2019’, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2.

உங்கள் கூப்பன் வந்து சேர கடைசி நாள்: 17.04.2019

நீங்க எப்படி பீல் பண்றீங்க