“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!” | Interview with VCK leader Thol.Thirumavalavan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

“தமிழகம் தாண்டியும் வளர்கிறோம்!”

பானை சின்னத்துக்கு வாக்குக் கேட்டு பிரசாரத்தில் பிஸியாக இருக்கும் திருமாவளவனைச் சந்தித்தேன்.

“நடைபெற இருக்கின்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் முதன்மை முழக்கம் எது?”

“ ‘வேண்டாம் மோடி’ என்பதைத்தான் அடிப்படை முழக்கமாக வைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறோம். கடந்த ஐந்தாண்டுகளில். ஜனநாயகச் சிந்தனையாளர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்திருக்கிறார்கள். பணமதிப்பு நீக்கம்,  ஜி,எஸ்.டி போன்ற தடாலடி நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதரத்தை அதலபாதாளத்தில் சரியக்கூடிய அளவுக்கு மோடி அரசு சீர்குலைத்தது. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது என்கிற பிரசாரத்தை முன்னெடுப்போம்”

“உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்க விசிகவுக்கு ஒரு தயக்கம் உண்டு. ஆனால் எதன் அடிப்படையில் விழுப்புரத்தில் அதை ஏற்றுக் கொண்டீர்கள்?”