மோடி செய்ததும் ஊழல்தான்! | Prime Minister Modi activities - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

மோடி செய்ததும் ஊழல்தான்!

ஓவியங்கள்: அரஸ்

‘ஊழல்’ என்ற வார்த்தைக்கு முழுமையான அர்த்தமாக காங்கிரஸ் கட்சியை உருவகப்படுத்துகிறது பி.ஜே.பி. காங்கிரஸ் தலைவர்களை உதாரணம் காட்டுகிறார் பிரதமர் மோடி. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதான ஆயுதமாக இருப்பது ரஃபேல் விவகாரம். ஆனால், சமீபத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ‘‘கமிஷனை எதிர்பார்த்துதான் ரஃபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் ஆட்சி தாமதம் செய்தது’’ என அதிரடி அணுகுண்டு வீசியிருக்கிறார். மத்தியில் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்து இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையே உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கிறது பி.ஜே.பி.

நேஷனல் ஹெரால்டு டிரஸ்ட்டில் மோசடி செய்ததாக சோனியா குடும்பம் மீது வழக்கு போட்டிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி. இந்த வழக்குக்காக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நீதிமன்றப் படியேறிக் கொண்டிருக்கிறார்கள். சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கிறார். ‘வதேராவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்’ என நீதிமன்ற அனுமதி கேட்டிருக்கிறது அமலாக்கத் துறை. வதேரா தொடர்பான நில பேர விவகாரங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறது சி.பி.ஐ. இந்த விஷயங்களை எல்லாம் சுட்டிக் காட்டி, ‘‘காங்கிரஸ் கட்சியின் குடும்பத் தலைமை இனி தலையெடுக்க முடியாது’’ என பி.ஜே.பி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர்மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் இருக்கின்றன.