நான்காம் சுவர் - 32 | Naangam suvar: Writer Backyam Sankar Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

நான்காம் சுவர் - 32

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

பாக்கியம் சங்கர்

லைவர் படம் போட்ட, ஆள்காட்டிவிரலையே மறைக்கும் அளவுக்கு இருக்கும் கோல்டு கவரிங் மோதிரத்தை `பூகம்பம் பூமணி’ போட்டார். ஐந்து வருடத்துக்கு ஒருமுறை அந்த ட்ரங்க் பெட்டி திறக்கப்படும். இதைப் பார்த்த அடைமழை கதிரேசன், ``எடுத்துப் போட்டுட்டார்யா மோதிரத்த... போன தடவ எல்லா தொகுதியிலயும் டெபாசிட்போச்சு... இப்ப என்ன போகப்போதோ!” அடைமழை கதிரேசனின் அறைகூவலுக்கு ``டேய்... எங்களுக்காவது டெபாசிட்தான் போச்சு. ஆனா வெற்றித் தொகுதின்னு நின்னீங்களே... அதுல நீங்க வாங்கின ஓட்டு எவ்ளோன்னு ஞாபகம் இருக்கா... மொத்தம் முந்நூத்தி சொச்சம். பொத்திக்கிட்டுப் போங்கடா!” என்று பதிலளித்தார் பூகம்பம். ``இதுக்குத்தான் இந்தத் தடவ எங்க தலைவி, புது வியூகத்துல பிரசாரம் பண்ணப்போறாங்க. மவன அப்பனும் புள்ளையும் ஏதாவது ஒண்ணுன்னா... எங்கால்லதான் வந்து விழணும்” என்று ரோஸ் பவுடரை அடித்துக்கொண்டார் பச்சைக்கிளி.