சோறு முக்கியம் பாஸ்! - 56 | Shivanyas Kumbakonam Kitchen hotel review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

சோறு முக்கியம் பாஸ்! - 56

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம் மூதாதைகள் சாப்பிட்ட உணவுகளில் இன்னும் நம் வாழ்க்கையோடு ஒட்டிப் பயணிக்கும் ஒன்று, உப்புக் கண்டம். நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு உப்புக் கண்டம் பற்றி தெரிந்திருக்குமா தெரியவில்லை. கிராமங்களில் இன்னும் பல வீடுகளில் வற்றல், ஊறுகாய் பாட்டில்கள் வரிசையில் உப்புக்கண்டமும் இருக்கிறது. பண்டிகை, விருந்துக் காலங்களில் கிடா வெட்டும்போது கொஞ்சம் இறைச்சியை உப்புக் கண்டத்துக்காக எடுத்து வைத்துக்கொள்வார்கள். உப்புப்போட்டுப் பிசைந்து  உச்சிவெயிலில் காயவைத்துப் பதப்படுத்தினால் கல்மாதிரி ஆகிவிடும்.

உணவகங்களில் உப்புக் கண்டம் சாப்பிடுவதை யெல்லாம் கற்பனைகூட செய்யமுடியாது. அதுவும் சென்னை மாதிரி நகரத்தில் வாய்ப்பேயில்லை. ‘சரி, தேடித்தான் பார்க்கலாமே’ என்று உப்புக்கண்டத்தை இலக்குவைத்து சுற்றியலைந்ததில் சிக்கியது, `ஷிவன்யாஸ் கும்பகோணம் கிச்சன் உணவகம்.’ சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில்  5-வது தெருவில் சற்று ஒதுக்குப்புறமாக இருக்கிறது இந்த உணவகம். வெளிப்புறத் தோற்றமே உள்ளே இழுக்கிறது. பெரிய வீடு... அழகிய வேலைப் பாடுகளோடு முகப்பில் ஒரு கயிற்றுக்கட்டில் போட்டு வெற்றிலை, பாக்கு வைத்திருக் கிறார்கள். சுற்றிலும் சோபா செட். டைனிங் உள்ளறையில் இருக்கிறது. 20 பேர் அமர்ந்து சாப்பிடலாம். பல்லாங்குழி, உப்பு, புளிவைக்கிற ஜாடி என பழமையான பொருட்களை யெல்லாம் சேகரித்து அழகாக ஒரு பக்கம் காட்சிப்படுத்தியி ருக்கிறார்கள். டேபிள், சேரிலேயே கலைநயம் ததும்புகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க