வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

வலைபாயுதே

twitter.com/shivaas_twitz
பஸ்ஸில், சில்லறையை அப்புறம் தர்றேன்னு கண்டக்டர் சொன்னவுடனே, ஒரு வடிவேலு  நமக்குள் புகுந்து விடுகிறார்..! 

twitter.com/iam_Saranallu
நம்மகூட படிச்சவங்க எல்லாரும் டாக்டர், என்ஜினியர் ஆகியாட்டாங்கனு சொல்லாம எல்லாரும் கல்யாணம் பண்ணி இரண்டு குழந்தைக்கு அப்பாவா கிட்டாங்களேனு கவலைப் படுறவங்கதான் 90’s கிட்ஸ்!! 

twitter.com/ksksfi
எந்த சேட்டிலைட்டை சுட்டுத் தொலைஞ்சிங்க? சுட்டி டீவி தெரிய மாட்டேங்குதுனு பக்கத்து வீட்டுப் பய அழுதுட்டு கிடக்கான்... 

twitter.com/yugarajesh2
‘தமிழில் கிரிக்கெட் கமெண்ட்ரி வராதா?’ என்று ஏங்கிய  பசுமையான நினைவுகளை, RJ பாலாஜி  தனது தமிழ் கமெண்ட்ரி மூலம் குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறார். 

twitter.com/Thaadikkaran 
சொல்ல வேண்டிய அட்வைஸ் எல்லாம் சொல்லிட்டு கடைசில, ‘நான் சொன்னா கேட்கவா போறே?’ன்னு சொல்லி முடிப்பது அட்வைசின் பைனல் டச்..!!