இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/04/2019)

இந்த நாடகத்தில் நீங்களும் நடிக்கிறீர்கள்! - சிறுகதை

ழ்ந்த உறக்கத்திலிருக்கும் இவன் ஜபு. முழுப் பெயர், `ஜனநாயக புத்திரன்.’ ஜனநாயகமே வெகுவாகச் சுருங்கிப்போய்விட்ட காலத்தில், தன் பெயர் மட்டும் இத்தனை நீட்டமாய் எதற்கு எனச் சுருக்கி, `ஜபு’வாகிவிட்டான். அவன் வீட்டு அழைப்புமணிதானே அடிக்கிறது, உங்களுக்கு ஏன் பதற்றம்? அவன் கண் விழித்து, கதவைத் திறக்கட்டும். கவனித்தீர்களா, அழைப்புமணியின் ஒலியைக் கேட்டு, அவன் அரக்கப்பரக்கவெல்லாம் எழுந்திருக்கவில்லை என்பதை.