“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி | Suhasini shares about Director Mahendran Memories - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“இன்னும் கொண்டாடியிருக்க வேண்டும் அவரை!” - சுஹாசினி

“உண்மையைச் சொன்னால் அப்பா சாருஹாசன்,  சித்தப்பா கமல், மகேந்திரன் சார் எல்லோருக்குமே சொந்த ஊர், பரமக்குடி.  நான்  திரைப்படக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது, சாரு ஹாசன் ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்புக்கு என்னை அழைத்துக்கொண்டு போனார். சென்னை அருணாச்சலம் ஸ்டுடியோவில் ‘போடா போடா பொக்கே... எள்ளுக் காட்டுக்குத் தெக்கே...’ பாடலைப் படமாக்கிக் கொண்டிருந்தார், மகேந்திரன் சார். ‘என்ன பண்ணிக்கிட்டி ருக்க’ என என்னைக் கேட்க, ‘போட்டோகிராபி கோர்ஸ் படிக்கிறேன்’ என்றேன். ‘என்னத்த படிச்சிக்கிட்டு... நம்ம ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடு’ என்றார். பிறகு, நான் படித்த ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் முறையாக அனுமதி வாங்கிக்கொண்டு ‘உதிரிப்பூக்கள்’ படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராகச் சேர்ந்துகொண்டேன். தொடர்ந்து ரஜினி சார் நடித்த ‘ஜானி’ படத்திலும் வேலை பார்த்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க