தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்! | Water demand problem in Tamilnadu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

தண்ணீர் இல்லை... தவிக்கும் தமிழகம்!

‘‘ஓட்டு போட்டாப் போடுங்க...போடாட்டிப் போங்க!’’

தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு, தன்னை வழி மறித்து வாக்குவாதம் செய்த மக்களைப் பார்த்து, இப்படிச் சொன்னவர் வேறு யாருமல்ல; இந்திய மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை. ராமநாதபுரத்தில், தண்ணீருக்காகச் சாலைமறியல் செய்த மக்களிடம் சிக்கிக் கொண்டு, கடும் வசைமாரியில் தவித்தார் தமிழக அமைச்சர் மணிகண்டன். கரூர், ராமநாதபுரம் மட்டுமல்ல; தமிழகமே வறட்சியில் கருகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 18 அன்று தமிழக மக்கள் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்குச் செல்வார்களா, காலிக்குடங்களைத் தூக்கிக்கொண்டு, வீதி வீதியாகத் தண்ணீருக்கு அலைவார்களா என்று தெரியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க