ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு! | Silamboli Chellappan Memories - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

ஒலிப்பதை நிறுத்திய சிலம்பு!

சிலப்பதிகாரத்தைப் பரப்புவதற்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த சிலம்பொலி செல்லப்பனின் வாழ்வு நிறைவுற்றது.

நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பன், முதலில் கணித ஆசிரியர் என்றால், பலரும் வியக்கத்தான் செய்வார்கள். கணிதத்தில் பட்டம்பெற்றவர், ஆசிரியராகவும் கல்வி அதிகாரி யாகவும் பணியாற்றினார். அவரின் தமிழ்ப்பற்று, தமிழ் வளர்ச்சித் துறையில் அவரைக் கொண்டு போய்ச் சேர்த்தது. அந்தத் துறையின் இயக்குநராகவும் தலைமையேற்றார்.