“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...” | kameela nassar Campaign in central chennai constituency - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/04/2019)

“ஜெயலலிதாவின் முதல் புகைப்படம்...”

தேர்தல் வந்தால் அரசியல்வாதிகள் பிஸியாவதைப் போல் சினிமாவுலகமும் பிஸியாகி விடும். ஒருபுறம் தாங்கள் சார்ந்த கட்சிக்குத் தேர்தல் பிரசாரம் செய்ய நட்சத்திரங்கள் களமிறங்கினால், இன்னொருபுறம் வேட்பாளர்களாகவும் அவதாரமெடுப்பார்கள். இந்தத் தேர்தலில் களமிறங்கும் சில சினிமா நட்சத்திரங்களைச் சந்தித்தோம்.

“தமிழகத்திலேயே ஒரு பெண் மண்டலப் பொறுப்பாளராக இருப்பது, மக்கள் நீதி மய்யம் கட்சியிலதான். நான் பதினாறு சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட சென்னை மண்டலத்தைக் கவனித்துக்கொள்கிறேன். கட்சியின் ஆடிட்டிங் மற்றும் ஃபைனான்ஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருக்கிறேன்.” - பிரசாரத்தின் இடையே நம்மிடம் பேசினார், ‘மக்கள் நீதி மய்ய’த்தின் மத்திய சென்னைத் தொகுதி வேட்பாளரும், நாசரின் மனைவியுமான கமீலா நாசர்.